/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தை அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
/
தை அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ADDED : ஜன 30, 2025 01:48 AM
தை அமாவாசைமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
நாமக்கல் :தை அமாவாசை தினமான நேற்று, காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை தினம், தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன் சந்திரனும், ஒரே ராசியில் சந்திக்கும் போது ஏற்படுகிறது. 30 திதிகளில், அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்ற திதி. இந்த நாளில், நம்முடன் வாழ்ந்து, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். புனித நீர்நிலைகளுக்கு சென்று நீராடி, அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையலிட்டு, எள், தண்ணீர் விட்டு வழிபடுவர். அதன்படி, தை அமாவாசை தினமான நேற்று அதிகாலையிலேயே, மோகனுார் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். எள், பச்சரிசி, தர்ப்பை புல் வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். தொடர்ந்து, ஆற்றில் புனித நீராடினர். மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
* இதேபோல், ப.வேலுார் காவிரி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே மக்கள் குவிய தொடங்கினர். முன்னோர்களுக்கு எள் பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின், ஆற்றில் கரைத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், ப.வேலுார் காவிரிக்கரை களை கட்டியது. தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த விநாயகர், காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தனர்.