/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 05, 2025 01:10 AM
புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ராசிபுரம், :ராசிபுரம் இன்னர் வீல், ஜே.சி.ஐ., மெட்ரோ, ரோட்டரி சங்கங்கள், வாசவி கிளப், வனிதா கிளப் சார்பில், ராசிபுரத்தில் புற்று
நோய் தடுப்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன் துவங்கிய பேரணியை, நகராட்சி தலைவர் கவிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, கச்சேரி வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், கவரை தெரு, கடைவீதி, ஆத்துார் சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக அண்ணா சாலை அரசு மேல்
நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. அதில், புற்றுநோய் தடுப்பு, கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.