/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அளவுக்கதிகமான கற்களை ஏற்றிசென்ற லாரியை சிறை பிடித்த மக்கள்
/
அளவுக்கதிகமான கற்களை ஏற்றிசென்ற லாரியை சிறை பிடித்த மக்கள்
அளவுக்கதிகமான கற்களை ஏற்றிசென்ற லாரியை சிறை பிடித்த மக்கள்
அளவுக்கதிகமான கற்களை ஏற்றிசென்ற லாரியை சிறை பிடித்த மக்கள்
ADDED : பிப் 14, 2025 01:25 AM
அளவுக்கதிகமான கற்களை ஏற்றிசென்ற லாரியை சிறை பிடித்த மக்கள்
மல்லசமுத்திரம்:ஆத்துமேடு பகுதியில், அரசு நிர்ணயித்த அளவை விட, கூடுதலாக கற்களை ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
மல்லசமுத்திரம் அருகே, தொட்டியப்பட்டி பஞ்., தொட்டியங்கரடு பகுதியில், கான்ட்ராக்டர் பிரபு என்பவர், சர்வே எண்;208ல், 2 ஹெக்டேர் அளவிற்கு கற்களை உடைத்து
விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளார். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமாக, 10 ஹெக்டேர் அளவிற்கு கற்களை உடைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் மூன்று கி.மீ., தொலைவிற்கு சாலை முற்றிலுமாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
ஐந்து நாட்களுக்கு முன், இவ்வழியாக சென்ற டிப்பர் லாரி, தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால், விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மதியம் 2;00 மணிக்கு ஆத்து மேடு பஸ் நிறுத்தத்தில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரியின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சிறை பிடித்தனர். வெண்ணந்துார் போலீசார் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.