/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் பயணம் செய்துமினி பஸ் வழித்தடம் ஆய்வு
/
கலெக்டர் பயணம் செய்துமினி பஸ் வழித்தடம் ஆய்வு
ADDED : பிப் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலெக்டர் பயணம் செய்துமினி பஸ் வழித்தடம் ஆய்வு
ராசிபுரம்:மினி பஸ் வழித்தடத்தில் மாற்றங்களை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, மினி பஸ் இயக்கப்பட உள்ள வழித்தடத்தில் பேளுக்குறிச்சி முதல் புதன்சந்தை வரை, 14 கி.மீ., மற்றும் புதன்சந்தை முதல் புத்துார் பிரிவு வேலகவுண்டம்பட்டி வரை, 15 கி.மீ., என, மொத்தம், 29 கி.மீ., துாரம், போக்குவரத்து துறை அலுவலர்களுடன், கலெக்டர் உமா பயணம் செய்து ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு பயனுள்ள வழித்தடமா என, கேட்டறிந்தார். நாமக்கல் வடக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

