/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆபத்தை உணராமல் ஏரியில்மீன் பிடிக்கும் இளைஞர்கள்
/
ஆபத்தை உணராமல் ஏரியில்மீன் பிடிக்கும் இளைஞர்கள்
ADDED : பிப் 20, 2025 01:35 AM
ஆபத்தை உணராமல் ஏரியில்மீன் பிடிக்கும் இளைஞர்கள்
வெண்ணந்துார்:வெண்ணந்துார் பகுதியில் சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பின. குறிப்பாக அக்கரைப்பட்டி ஏரி, மதியம்பட்டு ஏரி, தொட்டியப்பட்டி, மின்னக்கல் பகுதியில் பெரிய ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின.
இந்நிலையில், அக்கரைப்பட்டி ஏரி, மதியம்பட்டு ஏரி, தொட்டியபட்டி பகுதியில் சின்ன ஏரி, சோமுர் ஏரி, மின்னக்கல் பெரிய ஏரி உள்ளிட்ட ஏரி பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து துாண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், அக்கரைப்பட்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற பகுதிகளுக்கு போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

