/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'விசைத்தறிகள் இரும்பு கடைக்கு செல்லும்நிலை உருவாகி விட்டது'
/
'விசைத்தறிகள் இரும்பு கடைக்கு செல்லும்நிலை உருவாகி விட்டது'
'விசைத்தறிகள் இரும்பு கடைக்கு செல்லும்நிலை உருவாகி விட்டது'
'விசைத்தறிகள் இரும்பு கடைக்கு செல்லும்நிலை உருவாகி விட்டது'
ADDED : மார் 01, 2025 01:39 AM
'விசைத்தறிகள் இரும்பு கடைக்கு செல்லும்நிலை உருவாகி விட்டது'
பள்ளிப்பாளையம்:''தி.மு.க., ஆட்சியில் விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் நிலை உருவாகி விட்டது,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., சார்பில் கண்டிப்புதுார், அக்ரஹாரம், அம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில், கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். நகர பேரவை செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி, கொடியேற்றி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. இந்த நான்காண்டு, தி.மு.க., ஆட்சியில், விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் நிலை உருவாகி விட்டது. மீண்டும் இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே, தமிழகம் மீண்டும் வளர்ச்சியடையும்,'' என்றார்.