/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆண் குழந்தைகளை நல்வழியில்வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
/
ஆண் குழந்தைகளை நல்வழியில்வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
ஆண் குழந்தைகளை நல்வழியில்வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
ஆண் குழந்தைகளை நல்வழியில்வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
ADDED : மார் 08, 2025 01:25 AM
ஆண் குழந்தைகளை நல்வழியில்வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
நாமக்கல்:''ஆண் குழந்தைகளை நல்வழியில், சரியாக வளர்க்க வேண்டியது தாயாக நம் அனைவரது கடமை,'' என, மகளிர் தினவிழாவில், கலெக்டர் உமா பேசினார்.
சர்வதேச மகளிர் தின விழா, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: ஆண்டு தோறும், மார்ச், 8ல், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிராகிய நாம் அனைவரும், இன்று பல்வேறு துறையில், பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். பெண்களாகிய நாம் தாயாக, சகோதரியாக நம் பிள்ளைகளுக்கு குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களாகிய நமக்கு அலுவலகத்தையும், வீட்டையும் சரியாக வழிநடத்தி செல்லும் திறமை உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு, ஆண்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. பெண்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகளின் பாலின சமத்துவத்துத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆண் குழந்தைகளை நல்ல வழியில் சரியாக வளர்க்க வேண்டியது தாயாக நம் அனைவரது கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி உள்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.