/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகா மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்
/
மகா மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்
மகா மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்
மகா மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்
ADDED : மார் 18, 2025 01:40 AM
மகா மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் குண்டம் இறங்கி பரவசம்
மோகனுார்:மோகனுார் தாலுகா, தீர்த்தாம்பாளையத்தில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கிறது.
அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 10ல், கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி வழிபாடு
செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பூக்குழி பூஜை நடந்தது. தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, மணப்பள்ளி காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலை
அடைந்தனர். இதையடுத்து, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி பரவசமடைந்தனர். இரவு, 7:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.
இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டுதல், நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, கம்பம் ஆற்றில் விடுதல், மதியம், 4:00 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.