/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்புஜூஸ் கடைக்கு மக்கள் படையெடுப்பு
/
நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்புஜூஸ் கடைக்கு மக்கள் படையெடுப்பு
நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்புஜூஸ் கடைக்கு மக்கள் படையெடுப்பு
நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்புஜூஸ் கடைக்கு மக்கள் படையெடுப்பு
ADDED : மார் 19, 2025 01:20 AM
நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்புஜூஸ் கடைக்கு மக்கள் படையெடுப்பு
நாமக்கல்:நாமக்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, நகரின் பல்வேறு பகுதிகளில் இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி, குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அவற்றை வாங்கிப்பருகி, தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். மேலும், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, மோகனுார் சாலை மற்றும் கோட்டை சாலைகளில், ஏராளமான தள்ளுவண்டி கடைகளில், கம்மங்கூழ் விற்பனையும் செய்து வருகின்றனர்.
கரும்பு ஜூஸ் விலை குறைவாக இருப்பதுடன், ஐஸ் கலந்து தருவதால், ஜில்லென்று இறங்குகிறது. ஒரு டம்ளர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். ஒருவர், இரண்டு, மூன்று டம்ளர் வாங்கி பருகுகின்றனர். அதன் மூலம், ஓரளவுக்கு வெயிலில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதால், கரும்பு ஜூஸ் கடைக்கு, மக்கள் கூட்டமும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.