/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் குழி
/
நாமக்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் குழி
நாமக்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் குழி
நாமக்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் குழி
ADDED : மார் 21, 2025 01:30 AM
நாமக்கல் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் குழி
நாமக்கல்:நாமக்கல் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் குழியால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
நாமக்கல்-திருச்சி சாலையில் இருந்து மோகனுார் சாலைக்கு செல்லும் வகையில், ஆண்டவர் பங்க், அழகு நகர், டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகள் உள்ளன. அதில், வாகன போக்குவரத்து அதிகமுள்ள முக்கியமான சாலையாக டாக்டர் சங்கரன் சாலை உள்ளது. அந்த சாலையில், எல்.ஐ.சி., அலுவலகம், ஸ்டேட் பேங்க், தலைமை தபால் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. திருச்சி சாலை பிரிவிலிருந்து துவங்கும் அச்சாலையில், சாக்கடை வடிகால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கான்கிரீட் தளம் அருகே மெகா சைஸ் குழி ஏற்பட்டு சாலை உள்வாங்கப்பட்டுள்ளது. அதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தவறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையை சீரமைத்து தங்கு தடை இன்றி போக்குவரத்துக்கு வகை செய்ய, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.