/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமை செயலகத்திற்கு வாக்காளர்,ஆதார் அட்டை நகலை அனுப்பிய மக்கள்
/
தலைமை செயலகத்திற்கு வாக்காளர்,ஆதார் அட்டை நகலை அனுப்பிய மக்கள்
தலைமை செயலகத்திற்கு வாக்காளர்,ஆதார் அட்டை நகலை அனுப்பிய மக்கள்
தலைமை செயலகத்திற்கு வாக்காளர்,ஆதார் அட்டை நகலை அனுப்பிய மக்கள்
ADDED : ஏப் 11, 2025 01:18 AM
தலைமை செயலகத்திற்கு வாக்காளர்,ஆதார் அட்டை நகலை அனுப்பிய மக்கள்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட களியனுார் பஞ்சாயத்து கண்ணதாசன் நகர் பகுதி மக்களுக்கு, பட்டா வழங்குவதில் பல ஆண்டுகளாக இழுபறி நடந்து வருவதால், அப்பகுதியினர் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை நகலை தலைமை செயலகத்திற்கு தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட கண்ணதாசன் நகரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களுக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை. வருவாய்துறை அதிகாரியிடம் பலமுறை பட்டா கேட்டும், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முதல் கட்டமாக நேற்று முன்தினம் முதல், சென்னை தலைமை செயலகத்திற்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களை பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
அனுப்பப்பட்ட பதிவு தபாலுக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு அரசிடமே நேரில் சென்று ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.