/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தேர் திருவிழா
/
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தேர் திருவிழா
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தேர் திருவிழா
நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தேர் திருவிழா
ADDED : ஏப் 12, 2025 01:22 AM
நாமக்கல்பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் இன்று, நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி கோவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
ஒரே கல்லில் உருவான, நாமக்கல் மலையின் மேற்கு புறத்தில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, லட்சுமி நரசிம்மர், மூலவர் மலையை குடைந்து குடைவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு நேர் எதிரே, ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 'கார்க்கோடகன்' என்ற பாம்பின் மீது ரெங்கநாதர் அனந்த சயன நிலையில், மலையை குடைந்து குடைவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், பங்குனி மாதம், இந்த மூன்று தெய்வங்களுக்கும், ஒரே நாளில் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, இன்று நடக்கிறது.
கடந்த, 4ல், நரசிம்மர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் துவங்கியது. நேற்று முன்தினம், குளக்கரை மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு, கோட்டையில் உள்ள நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் தேரோட்டம், மாலை, 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அலுவலர்கள் செய்துள்ளனர்.

