/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி சுவரில் மனித கழிவை பூசிய வழக்கில் ஒருவர் கைது
/
பள்ளி சுவரில் மனித கழிவை பூசிய வழக்கில் ஒருவர் கைது
பள்ளி சுவரில் மனித கழிவை பூசிய வழக்கில் ஒருவர் கைது
பள்ளி சுவரில் மனித கழிவை பூசிய வழக்கில் ஒருவர் கைது
ADDED : செப் 07, 2024 07:53 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அரசு துவக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில், மனித கழிவை பூசியது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன், 25, என்வரை போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ஆனால், பல அரசியல் கட்சியினர் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என, தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் கூறியதாவது: பள்ளியில் சமையலராக பணிபுரியும் கார்த்தீஸ்வரிக்கும், துரைமுருகனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் துரைமுருகன், கடந்த, 1ல் பள்ளி சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும், அவரை கையால் சுவற்றில் எழுத வைத்து எழுத்துக்களை பார்த்ததில், அவர் தான் என உறுதியாகியுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.