sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஸ்டேஷனரி கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புக்கு சேதம்

/

ஸ்டேஷனரி கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புக்கு சேதம்

ஸ்டேஷனரி கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புக்கு சேதம்

ஸ்டேஷனரி கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புக்கு சேதம்


ADDED : ஆக 25, 2024 07:36 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி வேலுாரில் ஸ்டேஷனரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. ஏழு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் சத்திய-மூர்த்தி, 50; பரமத்தி வேலுாரில் திருவள்ளுவர் சாலை அருகே, ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வழக்கம்போல் கடையை மூடி சென்றார். நள்ளி-ரவு, 12:00 மணிக்கு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சத்தியமூர்த்திக்கும், வேலாயு-தம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்-தனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்தனர். ஆனால், தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம், நாமக்கல் தீய-ணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிய நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு முழுவதும் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் இயந்திரங்கள், நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் என, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக தெரிகி-றது. மின் கசிவால் விபத்து நடந்ததா அல்லது வேறு காரணமா என்று, பரமத்தி வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us