/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்ஜி., கல்லூரி மாணவருக்குஅபெக்ஸ் சங்கம் உதவி வழங்கல்
/
இன்ஜி., கல்லூரி மாணவருக்குஅபெக்ஸ் சங்கம் உதவி வழங்கல்
இன்ஜி., கல்லூரி மாணவருக்குஅபெக்ஸ் சங்கம் உதவி வழங்கல்
இன்ஜி., கல்லூரி மாணவருக்குஅபெக்ஸ் சங்கம் உதவி வழங்கல்
ADDED : ஜூலை 17, 2011 02:16 AM
நாமக்கல்: கோவை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் கூலித்
தொழிலாளியின் மகனுக்கு, நாமக்கல் அபெக்ஸ் சங்கத்தினர், 5,000 ரூபாய்க்கான
காசோலை வழங்கினர்.நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர்
கூலித்தொழிலாளி கோவிந்தராசு.
அவரது மகன் வருதராஜ் கோவை அரசு இன்ஜினியிரிங்
கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை தினத்தில்
தந்தையுடன் இணைந்து வேலை செய்து, கல்லூரி கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மாணவர்
வருதராஜ் செய்து வருகிறார்.அம்மாணவருக்கு, நாமக்கல் அபெக்ஸ் சங்கம்
சார்பில், கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சங்கத்
தலைவர் தியாகராஜன், முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை
வகித்து, மாணவர் வருதராஜூக்கு கல்வி உதித்தொகையாக, 5,000 ரூபாய்க்கான
காசோலையை வழங்கினர்.சங்க பொருளாளர் செல்வராஜ், டாக்டர் அருண் உட்பட பலர்
பங்கேற்றனர்.