ADDED : ஏப் 29, 2024 07:26 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகம் பயிரிடுவது மரவள்ளி தான். மானாவாரியாகவும், நீர் பாசன வசதியுடனும் இதை பயிரிடுகின்றனர். ஆனால், மரவள்ளி பயிரிட்டவுடன் கவனிக்க வேண்டிய பிரச்னைகளுக்கு கவனம் கொடுக்காததால் விளைச்சல் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மரவள்ளி நடவு செய்துள்ள விவசாயிகள், 3 முதல், 5 மாதங்களுக்குள் ஏக்கருக்கு யூரியா, 35 கிலோ மற்றும் பொட்டாஷ், 80 கிலோ மேலுரமாக இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். மேலும், செடி வெளுத்து காணப்படும் சமயத்தில் லிட்டருக்கு, 5 கிராம் மரவள்ளி பூஸ்டரை ஒட்டும் திரவம் கலந்து, ஒரு மாத கால இடைவெளியில், 3 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
