/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை
/
இலைப்பேனை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் வேளாண் பயிர்களில் இலைப்பேன், அசுவினி போன்ற பூச்சிகள் பாதிப்பு அதிகம் உள்ளது.
இதை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து நாமகிரிப்பேட்டை வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்த, 5 கி.கி., வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து, 100 லி., தண்ணீரில், 3 முதல், 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்க பயன்படுத்தலாம். இவை, நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே, இவைகளை விவசாயிகள் தயக்கமின்றி பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.