sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மார்கழி கிருத்திகையை முன்னிட்டுமுருகன் கோவில்களில் வழிபாடு

/

மார்கழி கிருத்திகையை முன்னிட்டுமுருகன் கோவில்களில் வழிபாடு

மார்கழி கிருத்திகையை முன்னிட்டுமுருகன் கோவில்களில் வழிபாடு

மார்கழி கிருத்திகையை முன்னிட்டுமுருகன் கோவில்களில் வழிபாடு


ADDED : ஜன 10, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : மார்கழி மாத கிருத்திகையையொட்டி, நாமக்கல்-மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கி 11:00 மணிக்கு

அபி ேஷகம் நடந்தது. சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.* நாமக்கல், கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், பாலதண்டாயுதபாணிக்கு பல்வேறு அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார்.

* மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணிய கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பின், தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது உள்ள, பிரசித்திபெற்ற வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, தனுர் மாத சிறப்பு வழிபாடு நடந்தது. முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

* நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள, ராஜாசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், ராஜா சுவாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* கபிலர்மலை பாலசுப்பிரமணியர் கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்

பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு

அபிஷேகம், அலங்காரம் நடந்தது.






      Dinamalar
      Follow us