/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2025 01:45 AM
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல்,:நாமக்கல் - பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நகர செயலாளருமான பாஸ்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், மெயின் ரோடு, மூன்று சிலை அருகே நடந்த விழாவில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.
* நாமக்கல் அடுத்த வசந்தபுரம் ஊராட்சி, தாண்டாகவுண்டனுாரில், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பசும்பொன்பாண்டியன், எம்.ஜி.ஆர்., உருவ படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
* மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை சந்தைத்திடல் அருகிலுள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எலச்சிபாளையம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையிலும், மல்லசமுத்திரம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையிலும், எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பெரியகுளம், காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
* திருச்செங்கோட்டில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி தலைமையில், எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
* ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.