தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பெரியமணலியில் மின் மயானம்அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பெரியமணலியில் மின் மயானம்அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

பெரியமணலியில் மின் மயானம்அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 24, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எலச்சிபாளையம், :பெரியமணலியை மையப்படுத்தி, மின்மயானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி மற்றும் அதன் அருகிலுள்ள ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து, 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், ஒரே ஒரு மயானம் மட்டும் உள்ளதால், மின்மயானம் அமைத்தால் பெரியமணலி மட்டுமின்றி, சுற்று

வட்டார மக்கள் மிகுந்த பயனடைவர்.இதுகுறித்து, பெரியமணலியை சேர்ந்த சமூகஆர்வலர் வேலு, 42, கூறியதாவது;

பெரியமணலி, ஜேடர்பாளையம் பகுதிகளில், 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஒரேஒரு மயானம் மட்டுமே உள்ளது. இதில், போதிய அளவு இடமில்லை. வேறுவழியில்லாமல் நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்மயானங்களுக்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை எரியூட்டி வருகிறோம். இது நீண்ட தொலைவில் உள்ளதால் செலவாகிறது.

எனவே, பெரியமணலியை மையப்படுத்தி மின்மயானம் அமைத்தால், ஜேடர்பாளையம், வேப்பம்பட்டி, கோக்கலை, குருக்குபுரம், பழக்காரன்காடு, தொண்டிப்பட்டி, அக்கலாம்பட்டி, சின்னமணலி, வையப்பமலை, எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த பயனடைவர். அரசு கவனம் செலுத்தி, மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us