/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 07, 2025 01:05 AM
மத்திய பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல், :கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மத்திய பட்ஜெட் இருப்பதாக கூறி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாமக்கல்லில் பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ெஹச்.எம்.எஸ்., மாவட்ட தலைவர் கலைவாணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை விற்று நிதி சேர்க்கும் முடிவை கைவிட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானத்தில், வரி போட்டு நிதியை உருவாக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
* நாமக்கல் மாவட்ட தொ.மு.ச., அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச., பேரவை தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின், மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.