/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் முருகன் கோவில்களில்தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
/
நாமக்கல் முருகன் கோவில்களில்தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
நாமக்கல் முருகன் கோவில்களில்தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
நாமக்கல் முருகன் கோவில்களில்தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 07, 2025 01:06 AM
நாமக்கல் முருகன் கோவில்களில்தை கிருத்திகை சிறப்பு வழிபாடு
நாமக்கல்,:நாமக்கல், காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், தை கிருத்திகையையொட்டி நேற்று காலை கணபதி பூஜை, அபிேஷகம் நடந்தது. சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சந்தனக்காப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தார்.
* நாமக்கல், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கருங்கல்பாளையம், கரையான்புதுார் கருமலை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமி தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாமக்கல், கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
* நாமக்கல், ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு திருநீறு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
* வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு, இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
* ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயர முள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே பச்சமலை முருகன் மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சேந்தமங்கலம், தத்தகிரி முருகனுக்கு, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.