/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கன்றுக்குட்டி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
/
கன்றுக்குட்டி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : பிப் 08, 2025 12:45 AM
மோகனுார் : மோகனுார் அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 70. இவர், வளையப்பட்டி - காட்டுப்புத்துார் சாலையில் உள்ள விவசாய தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு, இவரது எருமை கன்று ஒன்று, சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர், எருமை கன்றை துாக்கி வைத்துக்கொண்டு வேகமாக சென்றார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கம் இருந்தவர்கள், மர்ம நபரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து, மோகனுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நாமக்கல் என்.கொசவம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன், 24, என்பதும், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. வாலிபரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர். கன்றுக்குட்டி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம்,
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.