/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில்குழந்தை பராமரிப்பு கருத்தரங்கு
/
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில்குழந்தை பராமரிப்பு கருத்தரங்கு
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில்குழந்தை பராமரிப்பு கருத்தரங்கு
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில்குழந்தை பராமரிப்பு கருத்தரங்கு
ADDED : பிப் 15, 2025 01:52 AM
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில்குழந்தை பராமரிப்பு கருத்தரங்கு
திருச்செங்கோடு,திருச்செங்கோடு செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் துறை மாணவர்களுக்கு, பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.
செங்குந்தர் கல்வி குழும தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் நீலாவதி வரவேற்றார். பொருளாளர் தனசேகரன், செயலாளர் பாலதண்டபாணி, செயல் அலுவலர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல மருத்துவர்கள் பிரசன்னாபாலாஜி, மகேஷ்கண்ணா, ஸ்டீபன்பிரகாஷ் அருள்தாஸ், கோவை யுனைடெட் செவிலியர் கல்லுாரி முதல்வர் ரூபிஅனிதா, தாரமங்கலம் செங்குந்தர் செவிலியர் கல்லுாரி டாக்டர் சங்கீதா ஆகியோர், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
'பிறந்த குழந்தைக்கான சூடான சங்கிலி மேலாண்மை' என்ற தலைப்பில், சுவரொட்டி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.