/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லுங்கி ஆர்டர் அதிகரிப்பால்ப.பாளையத்தில் உற்பத்தி தீவிரம்
/
லுங்கி ஆர்டர் அதிகரிப்பால்ப.பாளையத்தில் உற்பத்தி தீவிரம்
லுங்கி ஆர்டர் அதிகரிப்பால்ப.பாளையத்தில் உற்பத்தி தீவிரம்
லுங்கி ஆர்டர் அதிகரிப்பால்ப.பாளையத்தில் உற்பத்தி தீவிரம்
ADDED : பிப் 19, 2025 02:18 AM
லுங்கி ஆர்டர் அதிகரிப்பால்ப.பாளையத்தில் உற்பத்தி தீவிரம்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள், லுங்கி, வேட்டி, சேலை உள்ளிட்ட ஜவுளிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் விற்பனை அடிப்படையில் ஆர்டர் இருக்கும். ஆர்டரை பொறுத்து உற்பத்தி நடக்கும். இதனால் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். பண்டிகை காலத்தில் ஆர்டர் அதிகளவு இருக்கும். அப்போது உற்பத்தியும் அதிகளவு நடக்கும்.இதுகுறித்து, நேருநகரை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சரவணன் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக லுங்கி உற்பத்தி நடந்து வருகிறது. ஆர்டர் அதிகரித்துள்ளது. ரம்ஜான் ஆர்டர் எதிர்பார்த்த அளவு வந்துள்ளதால், உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது,'' என்றார்.