/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி வரத்து அதிகரிப்புபடிப்படியாக குறையும் விலை
/
குண்டுமல்லி வரத்து அதிகரிப்புபடிப்படியாக குறையும் விலை
குண்டுமல்லி வரத்து அதிகரிப்புபடிப்படியாக குறையும் விலை
குண்டுமல்லி வரத்து அதிகரிப்புபடிப்படியாக குறையும் விலை
ADDED : பிப் 22, 2025 01:41 AM
குண்டுமல்லி வரத்து அதிகரிப்புபடிப்படியாக குறையும் விலை
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் குண்டுமல்லி பூக்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். விசேஷ நாட்களில் ஒரு கிலோ, 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். சாதாரண நாட்களில், 300 முதல், 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களாக, இப்பகுதியில் கடும் பனிப்பொழிவால் குண்டுமல்லி பூக்கள் வரத்து குறைந்தது. இதனால் சாதாரண நாட்களில் கூட, ஒருகிலோ குண்டுமல்லி, 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பனிப்பொழிவு குறைந்து வெயில் அதிகரித்துள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைய தொடங்கியுள்ளது.
கடந்த, 11ல் தைப்பூசம் அன்று, ஒரு கிலோ, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வரத்து அதிகரிப்பால், நேற்று முன்தினம், 600 ரூபாய், நேற்று, 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.