/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரம் வெட்டிய தொழிலாளிதவறி விழுந்து காயம்
/
மரம் வெட்டிய தொழிலாளிதவறி விழுந்து காயம்
ADDED : மார் 07, 2025 02:45 AM
மரம் வெட்டிய தொழிலாளிதவறி விழுந்து காயம்
நாமக்கல்:நாமக்கல், நரசிம்மர் கோவில் தெப்பத் திருவிழா, 100 ஆண்டுகளுக்கு பின் மார்ச், 12ல் நடைபெறுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கமலாலய குளத்தில், இந்த வைபவம் நடைபெற உள்ளதால், அதை துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், நீண்டு கொண்டிருக்கும் மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
குளத்தின் கிழக்கு பகுதியில் நேரு பூங்காவில் உள்ள, மரங்களின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல்லை சேர்ந்த தொழிலாளி கண்ணன், 30, என்பவர் திடீரென மரக்கிளை ஒடிந்து குளத்தினுள் விழுந்தார். போதிய உபகரணங்கள் இல்லாமல், மரக்கிளையை வெட்டியதால் அவருக்கு தலையில், தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.