/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட போலீசார் சார்பில்சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு
/
மாவட்ட போலீசார் சார்பில்சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு
மாவட்ட போலீசார் சார்பில்சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு
மாவட்ட போலீசார் சார்பில்சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 20, 2025 01:40 AM
மாவட்ட போலீசார் சார்பில்சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு
நாமக்கல்:மாவட்ட காவல்துறை சார்பில், சைபர் குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, நாமக்கல்லில் நேற்று நடந்தது. நாமக்கல் - மோகனுார் சாலை, பழைய அரசு மருத்துவமனை முன் துவங்கிய பேரணியை, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தார்.
பேரணி, மோகனுார் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் முடிந்தது. பேரணியில், சைபர் குற்றங்கள் என்ன, அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி, குற்றச்சம்பவங்கள் குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் கைலாசம், எஸ்.ஐ.,க்கள் சிவகுமார், கல்லுாரி மாணவர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.