இடித்த அங்கன்வாடி மையத்தைகட்டித்தர கிராம சபையில் கோரிக்கை
இடித்த அங்கன்வாடி மையத்தைகட்டித்தர கிராம சபையில் கோரிக்கை
ADDED : மார் 30, 2025 01:26 AM
இடித்த அங்கன்வாடி மையத்தைகட்டித்தர கிராம சபையில் கோரிக்கை
நாமகிரிப்பேட்டை:'மங்களபுரம் ஊராட்சியில், இடித்து ஒன்றரை ஆண்டுகளான அங்கன்வாடி மையத்தை கட்டித்தர வேண்டும்' என, கிராம சபையில் கோரிக்கை விடுத்தனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சியில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பா.ஜ., ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, உறுப்பினர் அழகரசன் உள்ளிட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இடித்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டது.
ஆனால், புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தரவில்லை. உடனடியாக கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 'ஜல்ஜீவன்' திட்டத்தில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தனர். பிரச்னைகளை குறித்துக்கொண்ட கிருபாகரன், விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
