/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் திருவிழாவில்சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு
/
மாரியம்மன் கோவில் திருவிழாவில்சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு
மாரியம்மன் கோவில் திருவிழாவில்சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு
மாரியம்மன் கோவில் திருவிழாவில்சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு
ADDED : ஏப் 09, 2025 01:48 AM
மாரியம்மன் கோவில் திருவிழாவில்சாட்டையடி வாங்கி விநோத வழிபாடு
நாமகிரிப்பேட்டை:சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத வழிபாடு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்தர்கள் பூச்சட்டியுடன் ஊர்வலமாக சென்று, கோவில் முன் நெருப்பை கொட்டினர். அதிலிருந்த சாம்பலை எடுத்து, பக்தர்கள் திருநீறாக நெற்றியில் பூசிக்கொண்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்த பூசாரி, பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் ஒவ்வொருவராக நடனமாடியபடியே வந்து கையை உயர்த்தி, சாட்டையடி வாங்கி செல்கின்றனர். இந்த விநோத வழிபாட்டை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சீராப்பள்ளி பகுதி மக்கள் கூறுகையில், 'சாட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என, அனைவரும் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, சுவாமியை வழிபடுகிறோம்' என்றனர்.