/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:48 AM
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகூட்ட தொடரில் அறிவிக்க ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சத்தியபாமா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுமதி, நிர்வாகி மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், நீதிமன்ற தீர்ப்புபடியும், அரசாணை, 56ன் படியும், இரு கட்டமாக கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து கவுரவ விரிவுரையாளர்
களுக்கும் குழு காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திதர வேண்டும்.வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 41 பல்கலை உறுப்பு கல்லுாரிகளை அரசு கல்லுாரியாக மாற்றியபோது, அரசாணை, 36, 186ல் விடுபட்ட பாடப்பிரிவில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு புதிய அரசாணை வெளியிடவும், மாத நிலுவை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.
பணிக்காலத்தில் இறந்த கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை, தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.