தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்குமா.திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்குமா.திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்குமா.திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா


ADDED : ஏப் 09, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்குமா.திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனுடைய இளம் குழந்தைகளை, ஒருநாள் கல்வி சுற்றுலாவிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் அறிவுசார் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும், 6 வயது வரையான இளம் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர், நர்சுகள், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்களுடன் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு, 25 மாற்றுத்திறன் குழந்தைகள் வேன் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, கலெக்டர் உமா வழியனுப்பி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us