/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்
/
தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்
தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்
தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்
ADDED : ஏப் 11, 2025 01:19 AM
தமிழில் பெயர் பலகை இல்லையாவணிக நிறுவனங்களுக்கு அபராதம்
ப.வேலுார்:-ப.வேலுார், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு அறிவித்துள்ள சட்டப்படி, அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள், தமிழில் வைக்க வேண்டும். மேலும் பெயர் பலகையில், தமிழில் முதன்மையாகவும் பின் ஆங்கிலத்திலும், அதைத் தொடர்ந்து அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு உத்தரவுப்படி, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்
சாலைகள், தனியார் பள்ளி கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இதுவரை பெயர் பலகையை தமிழில் முதன்மையாக அமைக்கப்படாத நிறுவனங்கள், மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதித்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.