தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி

மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி

மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 11, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி

திருச்செங்கோடு :திருச்செங்கோட்டில், மொபட் மீது மாருதி டிசையர் கார் மோதியதில், 300 அடி துாரம் துாக்கி வீசப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதிய வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருச்செங்கோடு அடுத்துள்ள, திம்மராவுத்தன்பட்டி சடையகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 25, ரிக் ட்ரில்லர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் திருச்செங்கோட்டில் இருந்து, சடைய கவுண்டம்பாளையத்திற்கு நாமக்கல் ரோடு திருமணமண்டபத்திற்கு அருகே, டிவிஎஸ் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த மாருதி டிசையர் கார், மொபட் மீது மோதியது. இதில், 300அடி துாரம் துாக்கி வீசப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி சம்பவ இடத்திலேயே நவீன்குமார் பலியானார்.

சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் கார் மோதி நின்றது. காரை ஓட்டி வந்த கல்லுாரி மாணவர்கள் தப்பி விட்டனர். திருச்செங்கோடு மின்சார வாரிய மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மரில் தொங்கிக் கொண்டிருந்த நவீன்குமார் உடலை, போலீசார் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் காரை ஓட்டி வந்தார்களா என்பது குறித்து, திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து போன நவீன்குமார், கந்தசாமி-நல்லம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் என்பது தெரியவந்துள்ளது. மகனை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்பவர்களை மனதை உருக்குவதாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us