/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணி நிரந்தரம் செய்ய கோரிடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பணி நிரந்தரம் செய்ய கோரிடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரிடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரிடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 01:45 AM
பணி நிரந்தரம் செய்ய கோரிடாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அதில், டாஸ் மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஏ.பி.சி.டி., சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்.சி., எஸ்.டி., பணியாளர்கள் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் முருகேசன், மாவட்ட தலைவைர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.