/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு
/
ஊர் பெயரில் திருத்தம் பள்ளி மாணவர்கள் மனு
ADDED : ஜூலை 05, 2025 01:47 AM
ராசிபுரம், ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர், நேற்று ராசிபுரம் நகராட்சி சேர்மேன் கவிதாவிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழகத்தில் தான் முத்தமிழ் வளர்க்கப்பட்டது. ராசிபுரம் நகர் கல்வி நிறுவனங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் தமிழில் ரா, ர என்ற எழுத்துகளுக்கு முன்னால், 'இ' என்ற உயிர் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும் என தமிழ் பாடத்தில் படித்துள்ளோம்.
ஆனால், ராசிபுரம் நகராட்சியில் ஊர் பெயர் பலகையில் இருந்து, குப்பை வண்டிகள் வரை பல இடங்களில், 'இ' என்ற உயிர் எழுத்தை சேர்க்காமல் ராசிபுரம் என்றே உள்ளது. இந்த பிழையை திருத்தி, 'இராசிபுரம்' என்று எழுத வேண்டும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என, குறிப்பிட்டுள்ளனர்.