வேட்பாளருக்கு போர்க்கொடி துாக்கிய ஒன்றிய செயலாளர் சமாதானம்
வேட்பாளருக்கு போர்க்கொடி துாக்கிய ஒன்றிய செயலாளர் சமாதானம்
ADDED : ஏப் 06, 2026 06:00 AM
நாமக்கல்:நாமக்கல்
சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அக்கட்சியின் மாநில
வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி மோகன் அறிவிக்கப்பட்டார். நகர
செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் முயற்சி செய்து வந்த
நிலையில், அவருக்கு ஒதுக்கீடு செய்யாததால், அவரது ஆதரவாளர்கள்
வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டும் என போர்க்கொடி துாக்கினர்.
மேலும்,
மாவட்ட செயலாளரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான தங்கமணி
எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது, தொகுதி மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து,
நான்கு ஒன்றிய செயலாளர்கள் தேர்தல் பணியை மேற்கொள்ளாமல்
பின்வாங்கினர்.
இந்த தகவல், கட்சி தலைமைக்கு சென்றது. கட்சி தலைமை
ஒன்றிய செயலாளர்களை வரவழைத்து சமரசம் செய்து வைத்ததாக
தெரிகிறது. இதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம்,
போர்க்கொடி துாக்கிய ஒன்றிய செயலாளர்கள், நாமக்கல் தொகுதி
அ.தி.மு.க., வேட்பாளர் ஸ்ரீதேவி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து
தெரிவித்தனர்.
தொடர்ந்து, இன்று, அ.தி.மு.க., வேட்பாளர் வேட்புமனு
தாக்கலின் போது அனைவரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி
உள்ளது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அதையொட்டி, நாமக்கல் சட்டசபை தொகுதி சூடுபிடித்துள்ளது.
