/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகாவீர் ஜெயந்தி நாளில் மது விற்ற 15 பேர் கைது
/
மகாவீர் ஜெயந்தி நாளில் மது விற்ற 15 பேர் கைது
ADDED : ஏப் 12, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாவீர் ஜெயந்தி நாளில் மது விற்ற 15 பேர் கைது
நாமக்கல், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவுப்படி, அனுமதியின்றி சரக்கு விற்பனை செய்வது குறித்து, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி, சரக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும், 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

