/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிர் கடன் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ADDED : பிப் 14, 2025 01:26 AM
பயிர் கடன் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை
நாமக்கல்:'விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் உச்ச வரம்பை, ரூ.3 லட்சத்தில் இருந்து, 5 லட்சமாக உயர்த்தி அரசு அறிவிக்க வேண்டும்,' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்ச வரம்பாக, மூன்று லட்சம் ரூபாய் வரை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 2025--26ம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் உச்ச வரம்பை, மூன்று லட்சத்தில் இருந்து, ஐந்து லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்பு கடன் பெற்று, குறித்த நேரத்தில் கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு, மீண்டும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்காமல் கிடப்பில் உள்ளது. அதை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.