/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2011 12:55 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், கலெக்டர் குமரகுருபரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு தாலுகா அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு வரும் நோயாகளிளுக்கு டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும், பணி நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும் பல்வேறு புகார்கள் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனுக்கு வந்தது. அதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருகை பதிவேடு, வெளிநோயாளிகள் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள், மருந்து, மாத்திரைகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான மருத்துவக்கருவிகள், மருத்துவமனை மேம்பாட்டுக்காக தேவையான மேல்நடவடிக்கை குறித்தும் தலைமை மருத்துவர் டாக்டர் ராமலிங்கத்திடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் சுகாதாரம், கழிப்பிட வசதி ஆகியவற்றை நன்கு பராமரிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.