ADDED : மே 20, 2024 02:12 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், காரவள்ளி யில் இருந்து கொல்லிமலைக்கு செல்ல, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
கொண்டை ஊசி வளைவுகளில் சாலை சிறியதாக இருந்ததால், சாலை விரிவுபடுத்தப்பட்டு நிலச்சரிவு ஏற்படும் இடங்களில், கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், சில நேரங்களில் மழை பெய்யும் போது, ஈரப்பதம் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதேபோல், கடந்த, 17ல் பெய்த மழையால், 27வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்றினர். இதனால் போக்குவரத்து சீரானது.
