/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா
/
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா
ADDED : ஆக 21, 2024 01:38 AM
மின்வாரிய ஒப்பந்த
ஊழியர்கள் தர்ணா
நாமக்கல், ஆக. 21-
பணி நிரந்தரம் செய்யக்கோரி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், நாமக்கல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, சி.ஐ.டி.யு., கரூர் - நாமக்கல் கிளை இணைந்து நடத்திய தர்ணா போராட்டத்திற்கு, கிளை தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
அதில், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இரண்டாண்டுகளில், 480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பிரிவு பணியிடங்களில், ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.