/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ெஹல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
/
ெஹல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 10, 2025 01:25 AM
ராசிபுரம், : ெஹல்மெட் அணியாமல், மொபைல்போன் பேசியபடி, டூவீலரில் வந்தவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராசிபுரம் பகுதியில் அலுவலக நேரமான காலை, மாலை நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் பெரும்பாலும் ெஹல்மெட் அணிவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று சேலம் சாலையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில், போக்குவரத்து எஸ்.ஐ., மைக்கேல் ராஜ் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக டூவீலரில் ெஹல்மெட் அணியாமல் வந்த, மொபைல்போன் பேசியபடி சென்றவர்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறிது நேரம் நிற்க வைத்து, ெஹல்மெட் அணியாமல் சென்றால், மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரையும் அனுப்பி வைத்தனர்.