/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மெக்கானிக் சங்கபொதுக்குழு கூட்டம்
/
டூவீலர் மெக்கானிக் சங்கபொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 12, 2025 01:16 AM
டூவீலர் மெக்கானிக் சங்கபொதுக்குழு கூட்டம்
திருச்செங்கோடு :திருச்செங்கோட்டில், டூவீலர் மெக்கானிக் சங்க, 30ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார்.
கூட்டத்தில், பெட்ரோல் பங்க்குகளில், டூவீலர்களுக்கு ஆயில் மாற்றி கொடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழக அரசு, டூவீலர் பழுது பார்ப்போருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். 'பிஎஸ்6' வகை இன்ஜின்கள், தற்போது இருசக்கர வாகனத்தில் வருவதால் அதனை பழுது நீக்க அரசு சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

