/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராமத்தை சூழ்ந்த மூடுபனியால் அவதி
/
கிராமத்தை சூழ்ந்த மூடுபனியால் அவதி
ADDED : ஜன 25, 2025 01:18 AM
கிராமத்தை சூழ்ந்த மூடுபனியால் அவதி
மோகனுார்,:மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2024ல் இயல்பைவிட அதிகளவு மழை பெய்தது.
இதேபோல், நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, மோகனுார் மற்றும் மணியங்காளிப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில், அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக, மோகனுார் - நாமக்கல் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது.
இது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதால், தங்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர். மேலும், குளிர்ந்த காற்று வீசியதால் கடும் குளிர் நிலவியது.
மணியங்காளிப்பட்டி கிராமத்தில், மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.இந்த மூடுபனி, காலை, 9:00 மணி வரை நீடித்தது. அதன் பிறகே மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.