/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 25, 2025 01:19 AM
சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு, :சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உதவி கோட்டப்பொறியாளர் நடராஜன், திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர், விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணி, காமராஜர் சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், நான்கு ரத வீதி, பள்ளிப்பாளையம் ரோடு, தெப்பக்குளம் வழியாக மீண்டும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.
இதில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி பொறியாளர்கள், திருச்செங்கோடு மோகன்ராஜ், பள்ளிப்பாளையம் பிரதீப்பாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.