ADDED : ஜன 29, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலம் அமைக்கும் பணி தீவிரம்
ராசிபுரம்: ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த, 7 மீ., அகல சாலை, 10 மீ., ஆக அதிகரிக்கப்படுகிறது. இதனால், சாலை அகலப்படுத்தும்  பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு
செய்தனர். மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். மின் கம்பங்களையும் மாற்றி அமைத்துள்ளனர். அதேசமயம், கக்காவேரி, வெங்காயபாளையம் ஆகிய, இரண்டு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால்
அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

