ADDED : பிப் 13, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கல்லுாரியில்ரத்ததான முகாம்
நாமக்கல்:நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 'யூத் ரெட் கிராஸ்' சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.
இதில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் கீர்த்தனா, ஸ்ரீராம், நிஷா, தனிஷ்குமார் ஆகியோர், ரத்த தானம் செய்வதற்கான தகுதிகள், அவசியம் மற்றும் ஆண்டுக்கு எத்தனை முறை ரத்த தானம் செய்யலாம் என்பது குறித்து பேசினர்.
முகாமில், பல்வேறு துறையை சேர்ந்த, 40 மாணவர்கள், அலுவலர்கள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.