ADDED : மார் 07, 2025 02:45 AM
அ நிறம் | அளவு
கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலை குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கொங்கண சித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்கிழமையன்று குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று மதியம், 12:00மணிக்கு பால், தயிர், திருநீரு, சந்தனம், திருமஞ்சனம், கரும்பு சாறு, பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.
மொரங்கம், நாகர்பாளையம், மரப்பரை, செக்காரப்பட்டி, குஞ்சாம்பாளையம், சின்னமணலி, பெரியமணலி, மின்னாம்பள்ளி, கள்ளுபாளையம், எலச்சிபாளையம், கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நெய் தீபமேற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
