தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மக்கள் குறைதீர் கூட்டம்கோரிக்கை மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்கோரிக்கை மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்கோரிக்கை மனுக்கள் குவிப்பு


ADDED : மார் 18, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் குறைதீர் கூட்டம்கோரிக்கை மனுக்கள் குவிப்பு

நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 555 மனுக்கள்

வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்று பேருக்கு, காதொலி கருவி, கண் கண்ணாடி, மடக்கு குச்சி, ப்ரெய்லி வாட்ச், தாங்குகட்டை என உதவி உபகரணங்கள் வழங்கப்

பட்டன. தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us